

பிலிப்பைன்ஸின் மின்டானாவ் தீவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ அவதூறாக விமர்சித்த விவகாரத்தால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி உள்ளது. இந்நிலையில் பிலிப்பைன்ஸில் முகாமிட்டுள்ள அமெரிக்க படை வீரர்கள் வெளி யேற வேண்டும் என்று அதிபர் ரோட்ரிகோ உத்தரவிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் அமெரிக்க படை முகாம் உள்ளது. அதில் பெரும்பான்மையான வீரர்கள் கடந்த ஆண்டு வெளியேறிவிட்டனர். எனினும் அமெரிக்க ராணுவ தொழில்நுட்ப பிரிவினர் தொடர்ந்து அங்கு முகாமிட்டுள்ளனர். அவர்களும் வெளியேற வேண்டும் என்று ரோட்ரிகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்கள் கூறிய போது, எங்களுக்கு அதிகார பூர்வமாக எவ்வித தகவலும் வரவில்லை என்று தெரிவித் தன.