பாகிஸ்தானுக்கு ரூ.2,000 கோடி உதவி நிறுத்தம்: அமெரிக்க ராணுவ தலைமையகம் அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு ரூ.2,000 கோடி உதவி நிறுத்தம்: அமெரிக்க ராணுவ தலைமையகம் அறிவிப்பு
Updated on
1 min read

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு நற் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்ட தால், அந்நாட்டுக்கான ரூ.2008 கோடி மதிப்பிலான ராணுவ உதவியை அமெரிக்க ராணுவ தலைமையகம் நிறுத்தி விட்டது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உதவுவதற்காக 2016-ம் நிதியாண்டுக்கு பாகிஸ்தானுக்கு 90 கோடி டாலர்கள் (சுமார் ரூ.6024 கோடி) ராணுவ நிதியுதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது.

ஆனால், அமெரிக்க நாடாளு மன்றத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டம்-2016-ல் பாகிஸ்தான் தீவிர வாத அமைப்புகளுக்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி, நிதியுதவி அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக் கப்பட்டது. மேலும் 90 கோடி டாலர் நிதியுதவியை 80 கோடி டாலராகவும், அடுத்த ஆண்டுக் கான நிதியுதவியை 30 கோடி டாலராகவும் (சுமார் ரூ.2008 கோடி) குறைத்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பாகிஸ்தானுக்கு நிதி யுதவி அளிக்க நிபந்தனை விதிக் கப்பட்டது.

அதாவது ஹக்கானி தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் உதவ வில்லை என்றும், அதற்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் அஸ்டன் கார்ட்டர் பாகிஸ்தானுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்திடம் நற்சான்றிதழ் கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நற்சான்றிதழை ஆஸ்டன் கார்ட்டர் கடந்த 30-ம் தேதி அளித்திருக்க வேண்டும். ஆனால், அவர் சான்றிதழ் அளிக்கவில்லை. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிக்கப்படமாட்டாது என அமெரிக்க ராணுவ தலைமை யகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவ தலைமை யகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஆடம் ஸ்டம்ப் கூறிய தாவது: தேசிய பாதுகாப்பு அங்கீ காரச் சட்டத்தின் தேவைகளின்படி, ஹக்கானி அமைப்பின் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத் துள்ளது என்பதற்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சான்றிதழ் அளிக்கவில்லை. எனவே, இம் முறை பாகிஸ்தானுக்கு 30 கோடி டாலர்கள் நிதியுதவி வழங்கப்பட மாட்டாது. 2015-ம் ஆண்டுக் கான கூடுதல் நிதியுதவியும் வழங் கப்படமாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நடவடிக்கை பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடை வாகக் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in