சிரியாவில் மீண்டும் ரசாயன தாக்குதலுக்கு தயாராகும் பஷார் அல் ஆசாத்: அமெரிக்கா எச்சரிக்கை

சிரியாவில் மீண்டும் ரசாயன தாக்குதலுக்கு தயாராகும் பஷார் அல் ஆசாத்: அமெரிக்கா எச்சரிக்கை
Updated on
1 min read

சிரியாவில் மற்றுமொரு ரசாயனத் தாக்குதலை நடத்த அதிபர் பஷார் அல் ஆசாத் தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிரியாவிலுள்ள அப்பாவி மக்களையும், குழந்தைகளையும் மீண்டும் ரசாயனத் தாக்குதல் நடத்தி கொல்ல அதன் அதிபர் பஷார் அல் ஆசாத் தயாராக இருப்பதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.

கடந்த எப்ரலில் சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலை போல் இந்தத் தாக்குதல் இருக்க வாய்ப்புள்ளது.

அவ்வாறு நடத்தினால் இதற்கான பெரிய விலையை சிரிய அதிபர் கொடுக்க நேரிடும்" என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

முன்னதாக சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டிலுள்ள கான் ஷேய்க்கூன் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் நடத்தியதாக கூறப்படும் ரசாயனத் தாக்குதலில் 80 பேர் பலியாகினர்.

இதனையடுத்து அமெரிக்கா சிரிய அரசு கட்டுப்பாட்டு பகுதிகளில் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக ஆறு ஆண்டுகளுக்கு மேலாக கிளர்ச்சாயாளர்கள் போரில் ஈடுபட்டுள்ளனர். இதில் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும், சிரிய அரசுக்கு ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சமீப நாட்களாக போரில் கிளர்ச்சியாளர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான பகுதிகள் அரசு கட்டுப் பாட்டின் கீழ் வந்துள்ளது.

தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் பகுதிகளை கைப்பற்ற சிரிய அரசுப் படைகள் முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in