

இலங்கை போர்க்குற்ற விசார ணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவது அவசியம் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்க ளுக்கான உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால், மனித உரிமை விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரோம் மாலினோவ்ஸ் ஆகியோர் இலங்கையில் அண்மையில் சுற்றுப் பயணம் செய்தனர்.
அப்போது ரோம் மாலினோவ்ஸ் கொழும்பில் நிருபர்களிடம் பேசியபோது, போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தின் கட்டமைப்பை இலங்கை அரசே தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
போர்க்குற்ற விசாரணை குழுவில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கமாட்டோம் என்று இலங்கை அரசு கூறிவ ரும் நிலையில் அமெரிக்காவின் கருத்து குழப்பத்தை ஏற்படுத்து வதாக அமைந்தது.
தற்போது கம்போடியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க மனித உரிமை விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரோம் மாலி னோவ்ஸ் தனது கருத்தை நேற்று தெளிவுபடுத்தினார். அவர் கூறி யதாவது: இலங்கை போர்க்குற்ற விசாரணை குழுவில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவது அவ சியம். உள்நாட்டு நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்தினால் நம்பகத்தன்மைவாய்ந்ததாக இருக்காது எனவே சர்வதேச தரத்தில் விசாரணை குழுவை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.