

அமெரிக்காவை பழிவாங்கப் போவதாக ஒசாமா பின்லேடன் மகன் மிரட்டல் விடுத்து பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இரட்டை கோபுர தாக்குதலுக்கு பழிவாங்கும் விதத்தில் பாகிஸ் தானின் அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லேடனை, அமெரிக்க சிறப்பு படையினர் 2011, மே மாதம் சுட்டுக் கொன்றனர். அவரது உடலையும் கடலில் கரைத்தனர்.
பாகிஸ்தானுக்கே தெரியாமல் நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி யிருந்தது. அதே சமயம் பின்லே டன் மகன் ஹம்சா பதுங்கி இருந்த இடத்தை அமெரிக்காவால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒசாமாவின் கூட்டாளிகள் அவரை காப்பாற்றி அல் குவைதாவின் தலைவர் பொறுப்பை ஏற்கும் வகையில் தயார்படுத்தி வருவதாக பேச்சு எழுந்தது.
இந்நிலையில் அமெரிக் காவுக்கு மிரட்டல் விடுத்து ஹம்சா பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி யுள்ளது. அதில் ‘‘அபோதாபாத்தில் தாக்குதல் நடத்தி எனது தந்தை யை கொன்று மிகப் பெரிய பாவத்தை நீங்கள் (அமெரிக்கா) செய்துவிட்டீர்கள். இந்த தவறுக ளுக்கு அமெரிக்கர்கள் நிச்சயம் பதில் சொல்லியே தீர வேண்டும். முஸ்லிம்களை கொன்று குவித்து வரும் அமெரிக்காவுக்கு எதிராக அல் குவைதா தொடர்ந்து ஜிஹாத்தில் ஈடுபடும்’’ என ஹம்சா பேசியுள்ளான்.
ஹம்சாவின் இந்த மிரட்டல் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.