

நூல்களை டிஜிட்டல்மயமாக்கும் கூகுள் நிறுவனத்தின் திட்டத்துக்கு எதிராக கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பதிப்புரிமை மீறல் வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான நூல்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் நூலகத்தை உருவாக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டமிட்டது.
இந்த திட்டத்தை எதிர்த்து நூல் ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
நூல்களை ஸ்கேன் செய்வதற்கு அதன் எழுத்தாளர்களின் அனுமதியை கூகுள் நிறுவனம் பெறவில்லை. எனவே, இது பதிப்புரிமையை மீறும் செயலாகும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.
கூகுள் நிறுவனம் வணிக நோக்கத்தில் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நூல் ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டி இருந்தது.
இந்த மனுவை விசாரித்து வந்த நீதிபதி டென்னி சின், மனுவை தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டார்.