

பிரிட்டன் இளவரசர் வில்லிய மின் மனைவி கேத் மிடில்டன் தேசிய ஓவியக் காட்சியக நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, 2-ம் எலிஸ பெத்தின் நெக்லஸ் அணிந்து அனைவரையும் கவர்ந்தார்.
லண்டனில் உள்ள தேசிய ஓவிய காட்சியகத்தில் செவ்வாய்க் கிழமை இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, இளவரசி கேத் மிடில்டன் அணிந்து வந்த நெக்லஸ் அனைவரையும் கவர்ந்தது.
அந்த நகையை அவர் ராணி 2-ம் எலிஸபெத்திடம் இருந்து பெற்று அணிந்து வந்திருந்தார். 1947-ம் ஆண்டு ராணி 2-ம் எலிஸபெத்துக்கு அப்போதைய ஹைதராபாத் நிஜாம் திருமணப்பரிசாகக் கொடுத்த தாகும் இந்த நெக்லஸ்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கேத் மிடில்டன் கூறுகையில், “இது போன்ற கண்காட்சிகளுக்கு ஆதரவளிப்பது மிகவும் மகிழ்ச்சி யளிக்கிறது. இந்த தேசிய காட்சியகத்தின் சாதனைகள் போற்றப்படக்கூடியவை. உலகின் மிக விலையுயர்ந்த ஓவியங்கள் மற்றும் நிழற்படங்களையும், பிரத் யேகமான படைப்புகளையும் தேசிய காட்சியகம் வைத்துள்ளது. இவை அனைவரையும் கவரக்கூடி யவை” என்றார்.