யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழ் - சிங்கள மாணவர் மோதல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழ் - சிங்கள மாணவர் மோதல்
Updated on
1 min read

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த 6 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் புதிதாகச் சேர்ந்துள்ள முதலாமாண்டு இளநிலை மாணவர்களை வரவேற்கும் விதமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

இப்பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவர்கள் பெரும் பான்மையாகவும், சிங்கள மாணவர்கள் சிறுபான்மையாகவும் பயில்கின்றனர்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிங்கள மாணவர்கள் பாரம்பரிய கண்டியன் நடனத்தை ஆடியுள்ளனர். இதற்கு தமிழ் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது.

மோதலைத் தொடர்ந்து காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் அறிவியல் பிரிவு ஒரு வாரத்துக்கு மூடப்பட் டுள்ளது.

“மீண்டும் திறக்கப்பட்டதும் மாணவர்களிடமிருந்து வாக்கு மூலம் பெறப்படும்” என யாழ்ப்பாணம் காவல்துறை தலைவர் சஞ்சீவ் தர்மரத்னே தெரிவித்துள்ளார்.

“இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி அரசை வலியுறுத்தி யுள்ளோம். இது மிகவும் துரதிருஷ்டவசமானது” என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க நிர்வாகி சன்னா ஜெயசுமனா தெரிவித்துள்ளார்.

இதனிடையே இம்மோதலை இன ரீதியாக மோதல் என சித்தரிக்க முயற்சி நடக்கிறது என்று பல்கலைக்கழக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

1980-களில் தமிழ் தேசியவாதிகளின் முக்கிய களமாக விளங்கிய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் அதிக அளவில் தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டுப் போர் கடந்த 2009-ல் நிறைவுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in