

கிரீஸ் நாட்டின் கிரிதி தீவு அருகே 700 அகதிகளுடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கி யது. இதில் இதுவரை 340 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 100 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட் டன. இதர அகதிகளை தேடும் பணி தொடர்கிறது.
சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்க ணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல்கின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் கிரீஸ் நாட்டின் தீவுகளில் அவர்கள் கரையேறி வருகின்றனர்.
இந்நிலையில் கிரீஸ் நாட்டின் கிரிதி தீவை நோக்கி 700 அக திகளுடன் சிறிய கப்பல் சென்று கொண்டிருந்தது. ஆனால் கரையை நெருங்கும் முன்பு அந்த கப்பல் கடலில் கவிழ்ந்தது.
சம்பவ பகுதியில் கிரீஸ் ராணுவத்தை சேர்ந்த போர் விமானம், 3 ஹெலிகாப்டர்கள், 2 படகுகளில் கடற்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் நேற்று இரவு வரை 340 பேர் மீட்கப்பட்டனர். 100 பேரின் சடலங்கள் கண்டுபி டிக்கப்பட்டன. இதர அகதிக ளைக் காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மீட்புப் படையில் ஈடுபட்டுள்ள கிரீஸ் கடற்படை வீரர்கள் கூறியபோது: கிரிதி தீவு அருகே ஒரு கப்பல் மூழ்குவதை கடலோர காவல் படை ரோந்து படகு வீரர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்தப் பகுதிக்கு கடற்படை விமானம், ஹெலி காப்டர்கள் மற்றும் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டன.பலத்த காற்று, அதிக பாரம் காரணமாக அகதிகள் வந்த கப்பல் கடலில் கவிழ்ந்திருக்கலாம் என்று சந்தே கிக்கிறோம். எனினும் விபத்துக் கான உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். காணாமல் போன வர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.
கடந்த மாத இறுதியில் மத்திய தரைக்கடலில் அடுத்தடுத்து 3 கப்பல்கள் மூழ்கி 700 பேர் உயிரிழந்துவிட்டதாக ஐ.நா. சபை தெரிவித்தது.