தெற்கு சூடானில் அகதிகளாக 10 லட்சம் குழந்தைகள்: ஐநா அறிக்கை

தெற்கு சூடானில் அகதிகளாக 10 லட்சம் குழந்தைகள்: ஐநா அறிக்கை
Updated on
1 min read

தெற்கு சூடானில் நடக்கும் உள்நாட்டுப் போரினால் 10 லட்சம் குழந்தைகள் அகதிகளானதாக ஐநா கூறியுள்ளது.

வடக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானின் 2011-ம் ஆண்டு சூடானிலிருந்து பிரிந்தது. அதன் பின்னர் இனவாரியாக பிளவுப்பட்ட தெற்கு சூடான் உள் நாட்டுப் போர் காரணமாக கடும் பஞ்சம் நிலவுகிறது.

இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக அகதிகளாக தங்களது நாட்டுக்குள்ளாகவே இடப்பெயர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெற்கு சூடானில் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாக 10 லட்சம் குழந்தைகள் அகதிகளாகி உள்ளதாக ஐநா இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெற்கு சூடானில் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாக தொடர்ந்து பஞ்சம் நாடு முழுவதும் பரவி வருகிறது.

ஏராளாமானோர் தங்களது வீடுகளை விட்டு இடப்பெயர்ந்து வருகின்றனர். மேலும், 10 லட்சம் குழந்தைகள் தங்கள் சொந்த நாட்டிலே அகதிகளாகியுள்ளனர். இதில் 75,000 பேர் தங்கள் குடும்பத்தினரை இழந்துள்ளனர். 75% சதவீத குழந்தைகள் தங்கள் பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளனர்"

கடந்த ஐந்து ஆண்டுகளாக தெற்கு சூடானில் நடக்கும் உள் நாட்டுப் போர் காரணமாக 10,000-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 1000 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in