Last Updated : 04 Aug, 2016 08:20 AM

 

Published : 04 Aug 2016 08:20 AM
Last Updated : 04 Aug 2016 08:20 AM

சீனா, ரஷ்யாவுடன் நல்லுறவை ஏற்படுத்துவேன்: டொனால்டு ட்ரம்ப் தகவல்

சீனா, ரஷ்யாவுடன் நல்லுறவை ஏற்படுத்துவேன் என்று குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

வெர்ஜினியாவின் அஷ்பர்ன் நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ட்ரம்ப் பேசியதாவது:

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளின்டன், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்களுடன் மோச மான உறவு வைத்திருந்தார்.

என்னைப் பொருத்தவரை சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தவே விரும்பு கிறேன். இந்த நாடுகளுடன் சண்டை போட்டுக் கொண்டிருப் பதற்கு பதிலாக, நல்லுறவை வைத்திருந்தால் ஐஎஸ் தீவிரவாதி களுக்கு எதிரான போரில் அவர் களையும் இணைத்துக் கொள்ள முடியும்.

புதினுடன் கடுமையானவராக நடந்துகொள்ள ஹிலாரி விரும்பு கிறார். வர்த்தக விஷயத்தில்தான் கடுமையாக இருக்க வேண்டும். ஏனெனில், இதுவரை வர்த்தகத் தில் முன்னிலை வகித்து வந்த நம் நாட்டை சீனா இப்போது பின் னுக்குத் தள்ளிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

மோசமான அதிபர் ஒபாமா

தனியார் தொலைக்காட்சி ஒன் றுக்கு ட்ரம்ப் அளித்த நேர்காண லில் கூறும்போது, “இப்போதைய அதிபர் பராக் ஒபாமா பயங்கர மானவர். நாட்டுக்குப் பேரழிவை ஏற்படுத்தியவர். இவரது பதவிக் காலம் அமெரிக்க வரலாற்றி லேயே மிகவும் மோசமானதாக அமையும்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x