

சர்வதேச விதிமுறைகள், ஐ.நா.வின் கட்டுப்பாடுகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணுஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்ற நிலை நிலவுகிறது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி நேற்று கூறியதாவது:
வடகொரியா ஏவுகணை, அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை முதலில் நிறுத்த வேண்டும். அதேபோல் தென்கொரிய அமெரிக்க போர் பயிற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இருதரப்பும் இதைப் பரஸ்பரம் செய்தால், கொரிய தீபகற்பத்தில் போர் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
அதன்பின் இருதரப்பும் சுமூகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். ஒரு பக்கம் அணு ஆயுத ஒழிப்பு மறுபக்கம் அமைதி பேச்சுவார்த்தை என இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யும் போது கொரிய தீபகற்பத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை விலகும்.
இவ்வாறு வாங் யி கூறினார்.