Published : 19 Feb 2014 10:32 AM
Last Updated : 19 Feb 2014 10:32 AM

தாய்லாந்தில் அரசு எதிர்ப்பாளர்கள் பாதுகாப்புப் படை மோதல்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அரசு எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த மோதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர். 58 பேர் காயம் அடைந்தனர்

காயம் அடைந்தவர்களில் 6 போலீஸார், ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளரும் அடங்குவர். பாங்காக்கில் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த அரசு கட்டடங்களை மீட்க கலவர தடுப்புப் போலீஸார் நடவடிக்கை எடுத்த சிறிது நேரத்தில் இருதரப்புக் கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது 100 ஆர்ப்பாட்டக் காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலக வலியுறுத்தி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஆதரவு கொடுத்து வருகிறது.

2006ல் நடந்த ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் பதவி இழந்த முன்னாள் பிரதமரும் தனது சகோதரருமான தட்சிண் ஷினவத்ரவின் இன்னொரு கைப்பாவையாகவே யிங்லக் செயல்படுகிறார் என்பது போராட் டக்காரர்களின் குற்றச்சாட்டு.

நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. அதை ஒடுக்க தேவையான சீர்திருத்தங்களை அமல்படுத்த அதிகாரத்தை சிறப்பு குழுவிடம் அரசு ஒப்படைக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் முற்றுகை யிட்டுள்ள அரசு கட்டிடங்களை பேச்சுவார்த்தை நடத்தியே மீட்க வேண்டும் என மக்கள் ஜனநாயக சீர்திருத்த கமிட்டி வற்புறுத்தியுள்ளது.

போராட்டத்தை ஒடுக்க வன்முறை வேண்டாம் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக தொழிலாளர் துறை அமைச்சரும் அமைதி,ஒழுங்கு பராமரிப்பு மையத்தின் இயக்குநருமான சலேம் யூபாம்ரங்க் தெரிவித்தார். பிப்ரவரி 2ம் தேதி யிங்லக் அரசு முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்தியது.இந்த தேர்தலை ஜனநாயக கட்சி புறக்கணித்தது. தேர்தல் நடந்த தினத்தில் 10000 வாக்குச்சாவடிகள் திறக்கப்பட வேயில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x