தோழி இறந்ததாக சமூக வலைத்தளத்தில் இடப்பட்ட பொய்ப் பதிவை நம்பி 11 வயது மாணவர் தற்கொலை

தோழி இறந்ததாக சமூக வலைத்தளத்தில் இடப்பட்ட பொய்ப் பதிவை நம்பி 11 வயது மாணவர் தற்கொலை
Updated on
1 min read

அமெரிக்காவில் 11 வயது சிறுவன் சமூக வலைதளத்தில் விளையாட்டாக போடப்பட்ட பதிவை உண்மை என நம்பி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 11 வயதான டைசன் பென்ஸ் தனது 13 தோழி தற்கொலை செய்து கொண்டதாக சமூக வலைதளத்தில் போடப்பட்ட பொய்யான பதிவை, உண்மை என்று நம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில், "டைசன் பென்ஸ் என்ற பள்ளி மாணவன், சமூக வலைதளத்தில் பொய்யாக வெளியான அவரது 13 வயது தோழி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை உண்மை என்று நம்பியுள்ளார். சில மணி நேரங்களுக்கு பிறகு டைசனை அவரது தாயார் அவரை தூக்கிலிட்ட நிலையில் கண்டெடுத்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

டைசனின் தயார் கத்ரீனா கோஸ் கூறும்போது, "எனது மகனை இறந்த நிலையில் நான் கண்டெடுத்த 40 நிமிடங்களுக்கு முன்புவரை அவன் நலமாகதான் இருந்தான். பள்ளிக்கூடங்களில் கிண்டல் செய்வது சகஜம், ஆனால் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது. டைசனை தற்கொலைக்குத் தூண்டியவர்கள் அவனுடன் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தவர்கள்.

இந்தக் குற்றத்தை நான் புறக்கணிக்கப் போவதில்லை. இத்தகைய குற்றங்கள் கவனிக்கப்பட வேண்டும்"

டைசன் பென்சை தற்கொலைக்குத் தூண்டிய இளம் குற்றவாளியின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளம் குற்றவாளியைப் பற்றிய விவரத்தையும், அவருக்கும் டைசனுக்கு என்ன உறவு என்பதையும் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

கைது செய்யப்பட்ட இளம்குற்றவாளியின் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in