

இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டுமென்று 63 சதவீத இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்று அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
19 சதவீதம் பேர் மட்டுமே காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளனர் என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.அமெரிக்காவின் பிரபலமான பெவ் ஆய்வு நிறுவனம் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:
இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற சில வாரங்களே உள்ளன. இந்நிலையில் அங்கு எந்த கட்சிக்கு அதிக ஆதரவு உள்ளது என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
பாஜகவின் பிரதமர் வேட்பாள ராக அறிவிக்கப்பட் டுள்ள நரேந்திர மோடி மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி நட்சத்திரமான ராகுல் காந்தி மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக பேசப்படவில்லை.
2013 டிசம்பர் 7-ம் தேதி முதல் 2014 ஜனவரி 12-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங் களைச் சேர்ந்த 2464 பேரிடம் நேர்காணல் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்தியா இப்போது வழி நடத்தப்படும் விதம் குறித்து 29 சதவீத இந்தியர்கள் மட்டுமே திருப்தி தெரிவித்துள்ளனர். 70 சதவீதம் பேர் அதிருப்தியில் உள்ளனர்.
10-ல் 6 பேர் (63 சதவீதம்) நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளனர். 10-ல் 2 பேர் (19 சதவீதம்) மட்டுமே காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டு மென்று கூறியுள்ளனர். மற்ற கட்சிகளுக்கு 12 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வயது வித்தியாசம் இன்றியும், கிராமம், நகரம் வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்பினர் மத்தியி லும் பாஜகவுக்கு அதிக ஆதரவு உள்ளது. வட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், டெல்லி ஆகியவற்றில் பாஜகவுக்கு அதிக ஆதரவு உள்ளது. இங்குள்ளவர்களில் 74 சதவீதம் பேர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வியப்பை ஏற்படுத்தும் விதமாக மோடி முதல்வராக உள்ள குஜராத், மகாராஷ்ரம், சத்தீஸ்கர், ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு சராசரியை விட குறைவாகவே (54 சதவீதம்) ஆதரவு உள்ளது. ஒடிசா, பிஹார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநி லங்களில் காங்கிரஸுக்கு அதிக ஆதரவு (30 சதவீதம்) உள்ளது.
எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை உருவாக்குவ தில் காங்கிரஸை விட பாஜக சிறப்பாக செயல்படும் என்று பெரும்பாலானவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஊழலுக்கு எதிராகவும் பாஜக கடுமையாக செயல்படும் என்றும் அதிகம் பேர் கூறியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.