இலங்கை அரசின் குற்றச்சாட்டை நிராகரித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கை அரசின் குற்றச்சாட்டை நிராகரித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு
Updated on
1 min read

இனச் சண்டைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை குலைந்து போனதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என இலங்கை அரசு சுமத்தும் குற்றச்சாட்டை இந்த கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. மாறாக பேச்சு குலைந்ததற்கு காரணம் அரசுதான் என அதன் மீதே குற்றம்சாட்டியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமுறை முன்முயற்சி எடுத்தபோதிலும் தம்முடன் நடத்திய நேரடிப் பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொண்டபடி செயல்படாமல் பல விஷயங்களில் அரசு பின்வாங்கியது. இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களை அமல்படுத்துவதற்கு தேவை யான நடவடிக்கைகளை எடுக் காமல் அரசு புறக்கணித்ததே 2011ல் அரசுடன் நடத்திய பேச்சு தோல்வி அடைய காரணமாக அமைந்தது.

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சு தோல்வியில் முடிய தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம் என அரசு சொல்வது தவறானது. இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்பட அரசு ஆர்வம் காட்டவில்லை. அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந் தங்களை அமல்படுத்த அரசு ஆர்வம் காட்ட வில்லை. இதனால் தான் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டியது என்றார் சம்பந்தன்.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை பேரவை யின் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், இனச்சண்டைக்கு தீர்வு காண் பதற்கான பேச்சுவார்த்தை முறிய தமிழ் தேசிய கட்டமைப்பின் பிடிவாதமே காரணம் என்று தெரிவித்திருந்தார்.

இதை மறுத்து மேற்கண்ட விளக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப் பேற்பது மற்றும் சிறுபான்மை தமிழர்களுடன் நல்லிணக்கம் காண்பதில் முன்னேற்றம் காணாமல் இருப்பது போன் றவற்றுக்காக இலங்கையை கண்டித்து ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இது இலங்கைக்கு எதிரான 3வது தீர்மானம் ஆகும். முந்தைய இரு தீர்மானங் களுக்கும் இந்தியா ஆதரவு கொடுத்தது. அமெரிக்கா தாக்கல் செய்துள்ள இந்த தீர்மானம் புலிகளுக்கு எதிரான இறுதி கட்டப் போரின்போது நடைபெற்ற போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வற்புறுத்துகிறது.

இனப் பிரச்சினை தொடர்பாக கடந்த ஆண்டில் நாடாளுமன்ற தெரிவுக் குழு அமைத்தபோது அதை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in