

இலங்கையில் தனி ஈழம் அமைய அங்கு வாழும் தமிழர்களிடமும் உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தமிழக முதல் வர் ஜெயலலிதா வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே பதில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெளிநாட்டு பத்திரிகை நிருபர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் பேட்டி கொடுத்தார். தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது:
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறிவிட்டவர்கள். அவர்கள் இலங்கைக்கு மீண்டும் திரும்பி வரப்போவதில்லை, அவர்கள் பிரிட்டிஷ் மற்றும் கனடா நாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர் என்றார்.
இந்தியா மற்றும் இலங்கை நாட்டு மீனவர்கள் மத்தியில் மோதல் நடப்பது பற்றி கேள்வி கேட்டபோது, இலங்கையின் வடக்கில் வாழும் மீனவர்கள் தொடர்பாக ஜெயலலிதா தொ டர்ந்து பேசுகிறார். ஆனால் வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவர் களின் வளங்களை பறித்துச் செல்பவர் களே தமிழ்நாட்டு மீனவர்கள் தான் என்பதை அவர் உணரவேண்டும் என்றார் ராஜபக்சே.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கை ராணுவம் நடத்திய போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. மனித உரிமை தலைவர் நவி பிள்ளை சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில் இந்த புகார் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரியிருந்தார். இதை இலங்கை திட்டவட்டமாக நிரா கரித்தது.
இந்நிலையில், மார்ச் 3-ல் தொடங்கும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத் தொடருக்காக இலங்கை எடுத்துள்ள ஏற்பாடுகள் உள்ளிட்டவை பற்றி ராஜபக்சே பேசினார்.
ஜெனிவாவில் கூடும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத் தில் அமெரிக்கா ஆதரவில் கொண்டு வரப்பட உள்ள தீர்மானம் இலங்கைக்கு உளைச்சலும் மன வேதனையும் தரக்கூடியது. அத்தகைய தீர்மானம் வேண்டாதது.
எனினும், இந்த தீர்மானம் தொடர்பான பிரச்சினைக் குள்ளேயே இலங்கை சிக்குண்டு விடாது. இப்போது வரையில் மனித உரிமை மீறல்கள் பற்றியோ போர்க்குற்றங்கள் பற்றியோ ஆதாரங்கள் இல்லை. ஏதாவது ஆதாரம் கிடைத்தால் அதை ஆராய்வோம்,
மார்ச் 28-ம் தேதி ஜெனிவாவில் இந்த தீர்மானத்தின் மீது நடக்கும் வாக்கெடுப்பில் இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பது தெரியவில்லை. பொதுத்தேர் தல் நடக்க உள்ளதால் வாக்காளர் களின் மனநிலையையும் எதிர்காலத் தையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது என்பது எங்களுக்குப் புரிகிறது.
கடந்த தடவை அவர்கள் எங்களுக்கு எதிராக வாக்களித் தார்கள். இந்த தடவை எங்களுக்கு எதுவும் புரியவில்லை.
இலங்கையை அமெரிக்கா மிரட்டுகிறது. இந்த தீர்மானத்தின் பின்னணியில் மறைமுக திட்டம் இருக்கக்கூடும். போர் முடிந்த 5 ஆண்டுகளில் அதாவது மிக குறுகிய காலத்தில் தமிழர்கள் மத்தியில் நிலவிய அச்ச உணர்வை மாற்றி நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறப்பாக செயல்பட்டுள்ளோம்.
இது போன்ற ஐநா தீர்மானங்கள் பல கியூபாவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த தீர்மானங்களைக் கண்டு அஞ்சவேண்டாம் அன்று அந்த நாடுகளுக்கு நான் அண்மையில் பயணம் செய்தபோது அதன் தலை வர்கள் என்னிடம் தெரிவித்தனர் என்றார் ராஜபக்சே.