அமெரிக்க சிந்தனையாளர் குழுவில் ரத்தன் டாடா

அமெரிக்க  சிந்தனையாளர்  குழுவில் ரத்தன் டாடா
Updated on
1 min read

அமெரிக்க சிந்தனையாளர் குழுவின் வாரிய உறுப்பினராக இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் முன்னிலை சிந்தனையாளர் குழுவான ஈஸ்ட் வெஸ்ட் சென்டரில் இதற்கு முன்பு 1993 முதல் 2004-ம் ஆண்டு வரை வாரிய உறுப்பினராக டாடா இருந்துள்ளார்.

டாடா குழுமத்தின் தலைவராக 1991- முதல் 2012-ம் ஆண்டு வரை பணியாற்றினார். இப்போது வர்த்தகம், தொழில் துறை தொடர்பாக பிரதமருக்கு ஆலோசனை அளிக்கும் குழுவின் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார்.-பி.டி.ஐ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in