ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளரை அறிவிப்பது தொடர்பான 4 நாள் மாநாடு பிலடெல்பியாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக நேற்று(செவ்வாய்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க அதிபர் வரலாற்றில் முன்னணி அரசியல் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்ட முதல் பெண் அதிபர் வேட்பாளர் என்ற பெருமை ஹிலாரிக்கு கிடைத்துள்ளது.

உள்கட்சி வேட்பாளர் தேர்வின் போது ஹிலாரியை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸை விட ஹிலாரிக்கு அதிகமான எண்ணிக்கையில் பிரதி நிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. அதிகபட்சமாக 2,807 பிரதிநிதிகள் ஆதரவு கிடைத்ததுள்ளது.

ஹிலாரியை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ் 1,894 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்தது. இதனையடுத்து ஜன நாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஹிலாரி பேராதரவுடன் தேர்தெடுக்கப்பட்டார்.

பெர்னி சாண்டர்ஸ் ஆதரவு

உள்கட்சி வேட்பாளர் தேர்வின் போது ஹிலாரியை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸும் பகைமையை மறந்து ஹிலாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் சாண்டர்ஸ் பேசும்போது, “ஹிலாரி கிளிண் டனின் புதிய யோசனைகள் மற்றும் அவரது தலைமைப் பண்பின் அடிப்படையில் பார்த்தால் அடுத்த அதிபராவதற்கான தகுதி அவருக்கு உள்ளது. அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன்” என்றார்.

பில் கிளிண்டன் புகழாரம்:

பில் கிளிண்டன்

ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், ஹிலாரியின் கணவருமான பில் கிளிண்டன் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

மேலும் ஹிலாரி கிளிண்டனின் அரசியல் பயணம் குறித்து பில் கிளிண்டன் கூறியபோது, ''ஹிலாரி இந்த நிலைக்கு வருவதற்கு அவர் மேற்கொண்ட பயணம் நெடுதூரம் கொண்டது. அவருடைய அரசியல் வாழ்வில் அவர் செய்த அரப்பணிப்புக்கு கிடைத்த வாய்ப்புதான் இது. இந்த வாய்பை அமெரிக்க மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த நிச்சயம் ஹிலாரி பாடுபடுவார்''என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in