

ஈரானில் 1979-ல் நடந்த இஸ் லாமிய புரட்சியின் ஆண்டுவிழா நேற்று அந்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப் பட்டது. அப்போது அமெரிக்காவின் மிகப் பெரிய தேசிய கொடியை பொது மக்கள் காலில் மிதித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற தும், ஏவுகணை சோதனை நடத்தி யதற்காக ஈரானுக்கு கண்டனம் தெரிவித்தார். அத்துடன் இரா னுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் ஈரான், அமெரிக்கா இடையிலான உறவில் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் 1979-ல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சியின் ஆண்டுவிழா நேற்று அந்நாடு முழுவதும் உற்சாகமாக கொண் டாடப்பட்டது. அப்போது தெருக் களில் பேரணி நடத்திய சிலர், அமெரிக்கா மற்றும் இஸ்ரே லுக்கு எதிராக கண்டன முழக் கங்கள் எழுப்பினர். மேலும் அமெரிக்காவின் தேசிய கொடி யையும் காலில் மிதித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஆசாதி சதுக்கத்தில் நடந்த கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அங்கு பொது மக்களிடையே உரையாற்றிய ஈரான் அதிபர் ஹஸன் ரவுஹானி, ‘‘எதிரி நாடுகளிடம் இருந்து வரும் எந்தவொரு மிரட்டலுக்கும் ஈரான் தக்க முறையில் பதிலடி கொடுக்கும். சிங்கங்களின் உறைவிடம்தான் ஈரான். அதே சமயம் எந்த நாட்டு டனும் பகைமை பாராட்டாது’’ என்றார்.
இந்தக் கூட்டத்தில், முஸ்லிம் களுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கர்களுக்கு ஈரான் மக்கள் நன்றி தெரிவிக்கும் விதமான பதாகைகளையும் ஏந்தி வந்தனர்.