கண்ணாடி மாளிகைக்குள் இருந்துகொண்டு கல் எறியக் கூடாது: பாகிஸ்தானுக்கு இந்தியத் தூதர் அறிவுரை

கண்ணாடி மாளிகைக்குள் இருந்துகொண்டு கல் எறியக் கூடாது: பாகிஸ்தானுக்கு இந்தியத் தூதர் அறிவுரை
Updated on
1 min read

கண்ணாடி மாளிகைக்குள் இருந்து கொண்டு கல் எறியக்கூடாது என்று பாகிஸ்தானுக்கு அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதர் கவுதம் பாம்பாவாலே அறிவுறுத்தி யுள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று முன்தினம் நடந்த கருத் தரங்கில் கவுதம் பாம்பாவாலே பங்கேற்றார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம், பலுசிஸ்தான் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கண்ணாடி மாளிகையில் வசிப்பவர்கள் பிறர்மீது கல் எறியக்கூடாது. காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ஆகும். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் பிரச்சினைகள் உள்ளன. பிற நாடுகளின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு முன், பாகிஸ்தான் தங்கள் நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் ஆகஸ்ட் 15-ம் தேதி நடந்த சுதந்திர தின விழாவில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் குறித்து பேசினார். மோடி இது தொடர்பாக தனக்கு வந்த கடிதங்களையே தனது உரையில் குறிப்பிட்டார்.

பயங்கரவாத பிரச்சினை பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் மற்றும் இந்த உலகுக்கும் தலைவலியாக உள் ளது. இதற்கு எதிராக இணைந்து பாடுபடலாம் என்றுதான் பாகிஸ் தானிடம் இந்திய அரசு கூறிவரு கிறது. ஒரே ஒரு விவகாரம் பற்றி மட்டுமே இரு நாடுகளும் பேசக் கூடாது. அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேச வேண்டும்.

சார்க் மாநாடு வரும் நவம்பரில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க இஸ்லாமபாத் பயணத்தை பிரதமர் மோடி எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த ஒன்றரை மாதங்களில் பாகிஸ்தான் இந்திய எல்லைப் படைகள் இடையே சுமூக உறவு இருந்துவருகிறது. சார்க் அமைப்பின் பல்வேறு கூட்டங்கள் நடந்துள்ளன.

பாகிஸ்தான் இந்தியா இடையிலான அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு அதிக காலம் பிடிக்கும். எனவே இரு நாடுகளுக்கு பொருளாதார உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்தை பாகிஸ்தான் தரவேண்டும்.

இந்தியாவில் நடைபெறும் வர்த்தக பொருட்காட்சிகளில் பாகிஸ்தான் வர்த்தக குழுக்கள் கூடுதலாக பங்கேற்க வேண்டும்.

இந்தியா பாகிஸ்தான் இடையே வர்த்தகத் தொடர்பை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே இருநாடுகள் இடையே சுமூக உறவு ஏற்படும். இது தொடர்பாக இருநாடுகளும் 2012-ல் தயாரித்த வர்த்தக திட்டம் விரைவில் வெளிவரலாம். இருநாடுகள் இடையிலான வர்த்தகம் தற்போது ஆண்டுக்கு 2,500 கோடி டாலராக உள்ளது. ஆனால் இதனை 20 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த முடியும். இந்த வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளது. என்றாலும் இரு நாடுகளும் பிற உறவுகளை மேம்படுத்த முடிவு செய்தன. இன்று இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி நாடுகளில் ஒன்றாக சீனா விளங்குகிறது.

இவ்வாறு கவுதம் பாம்பாவாலே கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in