நேபாளம் நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சந்தா தோல்வி

நேபாளம் நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சந்தா தோல்வி
Updated on
1 min read

நேபாளம் நாடாளுமன்றத் தேர்தலில் மாவோயிஸ்டு தலைவர் பிரச்சந்தா தோல்வியடைந்தார். நேபாளத்தில் கடந்த 19-ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், மாவோயிஸ்டு தலைவர் பிரச்சந்தா தோல்வியடைந்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானவுடன், வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருக்கிறது எனவே வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரச்சந்தா கோரிக்கை விடுத்துள்ளார். வாக்குப்பெட்டிகளை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லும் போதும் முறைகேடுகள் நடந்திருப்பதாக பிரச்சந்தா தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆனால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தப் போவதில்லை என அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையர் நீல் கந்தா தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில், 2008ல் நடந்த, பொதுத் தேர்தலில், மாவோயிஸ்டுகள், வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தனர். இதை தொடர்ந்து நேபாளத்தில், மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமலானது.

ஜனாதிபதி ராம்பரன் யாதவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால், பதவி ஏற்ற சில மாதங்களில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் பிரசாந்தா.

அதன்பின், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், பலர் பிரதமர்களாக பதவி வகித்தனர்.

நிலையான ஆட்சி அமையாததால், மன்னராட்சிக்கு பின், நேபாளத்தில் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படவில்லை.இதற்கிடையே, நீண்ட இழுபறிக்கு பின், கடந்த 19-ஆம் தேதியன்று தான் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in