

வியத்நாம் போரில் பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய இருநாடுகளையும் தோற்கடித்து பின்வாங்க வைத்ததில் பெரும் பங்கு வகித்தவரான வியத்நாம் முன்னாள் ராணுவ தளபதி வோ கெயின் கியாப் (102) இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
ஹனோயில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வெள்ளிக் கிழமை அவர் காலமானார்.ஹனோயில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தமது உன்னதத் தலைவரின் உடலுக்கு, ஒரு வார காலமாக முன்னாள் ராணுவத்தினர், பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.