

அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் இன்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேசினார். வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
அப்போது, நவாஸ் ஷெரிஃப்பிடம் கடந்த 2010- ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் இன்னும் விசாரணையை ஆரம்பிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தவிர, பாக். மண்ணில் இருந்து செயல்படும் ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பு குறித்தும், எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றியும் ஒசாமா பின் லேடனை வீழ்த்த உதவிய பாகிஸ்தானிய டாக்டர் ஷகில் அஃப்ரிதி சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்தும், ஒபாமா கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஒபாமாவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் இவற்றை தெரிவித்தார்.
ஒபாமாவுடன் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதாக தெரிவித்த ஷெரிஃப், இது தொடர்பாக என்ன பேசினார் என்பதையும் அவருடைய பேச்சுக்கு ஒபாமாவின் எதிர்வினை என்னவாக இருந்தது என்பதையும் அவர் தெரிவிக்கவில்லை.