இந்து திருமண சட்டம் பாக்.கில் விரைவில் அமல்

இந்து திருமண சட்டம் பாக்.கில் விரைவில் அமல்
Updated on
1 min read

பாகிஸ்தானில் சிறுபான்மையின ரான இந்துக்களின் திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கும், இந்து திருமணச் சட்ட வரைவு மசோதா வுக்கு, சட்டம் மற்றும் நீதித்துறைக் கான நிலைக்குழு கடந்த பிப்ரவரி மாதம் தனது ஒப்புதலை வழங்கியது.

இதைத் தொடர்ந்து, நிலைக் குழுவின் பரிந்துரையுடன், தேசிய சபையில் நேற்று முன்தினம் இம் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய சபையில் இம்மசோதா தாமத மாக வந்தாலும், ஆளும் பாகிஸ் தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி யின் ஆதரவு உள்ளதால், இம் மசோதா எளிதில் நிறைவேறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரைவு மசோதாவில், கணவர் இறந்துவிட்டால், ஆறு மாதத்துக்குப் பிறகு மனைவி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும், 17-வது பிரிவு மற்றும் விவாகரத்து உள் ளிட்டவை தொடர்பான, 12, 15 ஆகிய பிரிவுகளுக்கு இந்து சமூகத் தினர் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். எனினும், பாகிஸ்தா னில் மணமான இந்து பெண்கள் கடத்தப்படுவது மற்றும் கட்டாய மதமாற்றம் போன்றவை இச் சட்டத்தின் மூலம் தடுக்கப்படும் என கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in