Published : 24 May 2017 12:17 PM
Last Updated : 24 May 2017 12:17 PM

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தாய்நாடு திரும்ப கைதிகளுக்கு உதவும் இந்திய தொழிலதிபர்

ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் தண்டனை காலம் முடிந்த கைதிகள் அவரவர் தாய்நாட்டுக்கு திரும்ப இந்திய தொழிலதிபர் பெரோஸ் மெர்சன்ட் உதவி செய்து வருகிறார். மும்பையைச் சேர்ந்த பெரோஸ் கடந்த 1989-ம் ஆண்டில் துபை சென்றார். அங்கு தங்க நகைக் கடைகளைத் தொடங்கிய அவர் தற்போது ஐக்கிய அரபு அமீ ரகத்தின் மிகப்பெரிய தொழி லதிபராக உருவெடுத்துள்ளார்.

அவருக்கு உலகம் முழுவதும் 125 நகைக் கடைகள் உள்ளன. 3,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரபு நாடுகளின் 50 முன்னணி தொழிலதிபர்கள் பட்டியலில் பெரோஸ் 30-வது இடத்தில் உள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் தன்னார்வ தொண்டு பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக சிறைக் கைதிகளின் விடுதலைக்காக பெருமளவில் செலவு செய்து வருகிறார்.

ஐக்கிய அரபு அமீரக சிறை களில் இந்தியர்கள் உட்பட ஏராள மான வெளிநாட்டு தொழிலாளர்கள் கைதிகளாக உள்ளனர். அவர் களில் பலர் தண்டனை காலம் முடிந்த பிறகும் நாடு திரும்ப பணம் இல்லாமல் சிறையிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். அவர் களின் கடன் தொகை மற்றும் விமான டிக்கெட் செலவை ஏற்றுக் கொள்ளும் பெரோஸ் இதுவரை 4 ஆயிரம் கைதிகளை விடுவித்து அவரவர் தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சிறைக் கைதிகளுக்கு உதவு வதற்காக ஐக்கிய அரபு அமீரக சமூக நலத் துறை சார்பில் கடந்த 2009-ல் ‘பராஜ் அறக்கட்டளை’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையோடு இணைந்து தொழிலதிபர் பெரோஸ் செயல்பட்டு வருகிறார்.

அதன்படி ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் தண்டனை காலம் முடிந்த கைதிகள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப ஆண்டு தோறும் ரூ.85 லட்சத்தை பராஜ் அறக்கட்டளைக்கு நன்கொடை யாக வழங்க பெரோஸ் உறுதி அளித்துள்ளார். அவரின் முயற்சி யால் அண்மையில் 132 கைதிகள் அவரவர் சொந்த நாடுகளுக்குத் திரும்பினர்.

திருட்டு, கடன், பாஸ்போர்ட் மோசடி என்ற குற்றங்களில் சிக்கிய வர்களுக்கு மட்டுமே பெரோஸ் உதவி வருகிறார். கொலைக் குற்றவாளிகளுக்கு அவர் எவ்வித உதவியும் செய்வதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x