Last Updated : 07 Aug, 2016 09:09 AM

 

Published : 07 Aug 2016 09:09 AM
Last Updated : 07 Aug 2016 09:09 AM

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்து மருத்துவர் சுட்டுக்கொலை: மத உள்நோக்கத்துடன் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் 56 வயதான இந்து மருத்துவர் , அவரின் மருத்துவமனைக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட் டார். மத ரீதியான உள் நோக்கத் துடன் இப்படுகொலை நிகழ்த்தப் பட்ட தாக கூறப்படுகிறது.

கராச்சி நகரின் பார்டன் ஈஸ்ட் பகுதியில் வசித்து வந்த மருத் துவர் பிரீத்தம் லக்வானி, பாக் காலனியில் பாரா ரோடு அருகே மருத்துவமனை நடத்தி வந்தார். கடந்த வியாழக்கிழமை அன்று, மருத்துவமனைக்கு வெளியே அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

நெஞ்சுப் பகுதியில் குண்டடி பட்டுக் கிடந்த அவர் உடனடி யாக அப்பாஸி ஹகீத் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். பின்னர், அகா கான் பல்கலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இப்படுகொலையை செய்தது யார் என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையில் ஈடு பட்டது ஒருவரா, ஒன்றுக்கும் மேற்பட்டவரா என்ற தகவல் கூட போலீஸாருக்கு கிடைக்க வில்லை.

‘குடியிருப்புகள் நிறைந்த பகு தியில் இச்சம்பவம் நிகழ்ந்துள் ளது. சம்பவத்தின் போது, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. திட்ட மிட்ட இக்கொலைக்கான பின்னணி குறித்து இன்னும் தெரியவரவில்லை. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறோம்’ என, போலீஸ் அதிகாரி முகமது ஹஸ்னாயின் கூறினார்.

ஆனால், இது மதரிதீயாக உள்நோக்கத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என, முதாகிதா குவாமி இயக்கத்தைச் சேர்ந்த சஞ்சய் பெர்வானி கூறியுள் ளார். ‘கைபேசிக்கு ரீசார்ஜ் கார்டு வாங்கி வருமாறு, தனது உதவி யாளரை மருத்துவர் வெளியே அனுப்பியிருக்கிறார். அச்சமயத்தில் யாரோ இப் படுகொலையை நிகழ்த்தியுள் ளனர்’ என, அவர் கூறினார்.

மருத்துவரின் மகன் ராகேஷ் குமார் கூறும்போது, ‘15 ஆண்டு களாக இப்பகுதியில் மருத்துவ மனை நடத்தி வருகிறார். அவருக்கு யாரும் விரோதி கிடையாது. இதுவரை யாரிடம் இருந்தும் எவ்வித மிரட்டலும் வந்ததில்லை’ என்றார்.

கடந்த வாரம், கராச்சி நகர மருத்துவமனை ஒன்றின் ஐசியு பிரிவில், 32 வயதே ஆன அனில் குமார் என்ற இந்து மருத்துவர் மர்மமான முறையில் இறந்து கி டந்தார். அதற்கு முன், அப்பாஸ் டவுன் பகுதியில் இந்து மதத்தைச் சார்ந்த 2 பேர் உட்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப் பி டத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x