

பாகிஸ்தானில் போலீஸ் உயர் அதிகாரியும், 2 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாகிஸ்தானின் சிந்த் மாகாந்த்தில் இருக்கிறது கோட்கி மாவட்டம். அங்குள்ள காவல் நிலையத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கிம்ப்ரா காவல் நிலையத்தின் தலைமை காவல் அதிகாரி அப்துல்லா அவான் மற்றும் அவரது 2 உதவியாளர்களும் அருகே இருக்கும் குடியிருப்புப் பகுதியில் இருந்து, திருட்டு வழக்கில் கைது செய்வதாக கூறி 2 சிறுமிகளை பிடித்துச் சென்றுள்ளனர். இருவருக்கும் முறையே 16, 18 வயது.
காவல்நிலையதில் வைத்து அந்த 2 சிறுமிகளையும் தொடந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். ஞாயிற்றுக் கிழமை அவர்களை விடுவித்ததோடு, சம்பவம் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸ் உயர் அதிகாரியும், 2 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.