

பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின், வடக்கு வாசிரிஸ்தானின் பழங்குடியின பகுதியை குறிவைத்து ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பலியானவர்கள் அடையாளம் காணப்படவில்லை.
தாக்குதல் நடத்தப்பட்ட வடக்கு வாசிரிஸ்தான் தாலிபன், அல்குவைதா பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும்.
ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்படுவது, தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு அண்மைக்காலமாக கண்டனம் தெரிவித்து வருகிறது.