

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் சுழன்றடித்த சூறாவளியில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை, 100-ஐ எட்டியுள்ளது. கட்டிடங்கள் இடிந்தும், மரங்கள் பெயர்ந்தும், வாகனங்கள் கவிழ்ந்தும், 800-க்கும் அதிகமானோர் காய மடைந்துள்ளனர்.
ஜியாங்சு மாகாணத்தில் யான்செங் மற்றும் புறநகர் பகுதி களில் கடந்த வியாழக்கிழமை பயங்கர சூறாவளிக் காற்று வீசியது. மணிக்கு, 125 கி.மீ. வேகத் தில் வீசிய இந்த சூறாவளியால் ஏராளமான கட்டிடங்களின் கூரை கள் பெயர்ந்து விழுந்தன. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து கடுமையாக சேதமடைந் தன. வாகனங்கள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு கிடந்தன. மரங்கள் முறிந்து, சாலைகள் வழிமறிக்கப் பட்டிருந்தன.
இதில், பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று, 100-ஐ எட்டிவிட்ட நிலையில், 800-க்கும் அதிகமான மக்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு, வெவ்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக, மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.