Last Updated : 01 Aug, 2016 04:23 PM

 

Published : 01 Aug 2016 04:23 PM
Last Updated : 01 Aug 2016 04:23 PM

முக்கிய மின்னஞ்சல்களை வட கொரியா வேவு பார்க்கிறது: தென் கொரியா குற்றச்சாட்டு

தங்கள் நாட்டின் அரசு ஆவணங்கள் தொடர்பான மின்னஞ்சல்களை வட கொரியா வேவு பார்க்கிறது என்று தென் கொரிய வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தென் கொரியாவின் தலைநகரான சியோலை சேர்ந்த, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வட கொரியா அரசாங்கம் சைஃபர் க்ரைம் குற்றத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் வடகொரிய அரசாங்கத்தால் மறைமுகமாக இயக்கப்படும் ஒரு நிறுவனம் தென் கொரியாவின் பத்திரிக்கையாளர்கள், அரசு அலுவலர்களுக்கு அரசாங்கம் தகவல்களை அனுப்பும் மின்னஞ்சலின் கடவுச் சொல்லை கண்டறிந்து உளவுப்பார்த்து வருகிறது. ஏறக்குறைய 56 மின்னஞ்சல்களின் கடவுச்சொல்கள் வட கொரியாவால் களவாடப்பட்டுள்ளது.

மேலும் அதில் உள்ள தென் கொரிய அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை வட கொரியாவின் அரசாங்க தளங்களில் இயங்கும் முக்கிய நபர்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்ததாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். இதுவரை தென் கொரிய அரசாங்கம் சார்ந்து எந்த ஒரு முக்கிய ஆவணங்களும் வெளியாகவில்லை எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தென் கொரியாவை உளவு பார்ப்பதற்காகவே 6000 பேர் கொண்ட சைஃபர் படைக் குழுவை வட கொரியா நியமித்துள்ளது எனவும் தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

தென் கொரியாவின் இந்த குற்றச்சாட்டை வட கொரியா முற்றிலுமாக மறுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x