Last Updated : 08 Sep, 2016 09:18 AM

 

Published : 08 Sep 2016 09:18 AM
Last Updated : 08 Sep 2016 09:18 AM

விண்ணில் அதிக நாட்கள் கழித்த அமெரிக்க விண்வெளி வீரர் பூமிக்கு திரும்பினார்

அமெரிக்க விண்வெளி வரலாற்றில் விண்ணில் அதிக நாட்கள் கழித்த விண்வெளி வீரர் ஜெஃப் வில்லியம்ஸ் (58) மற்றும் 2 ரஷ்ய விண்வெளி வீரர்கள் நேற்று பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.

விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத் துக்கு சுமார் 6 மாத பயணமாக சென்ற இவர்கள், ரஷ்யாவின் சோயுஸ் விண்வெளி ஓடம் மூலம் மத்திய கஜகஸ்தானில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7.13 மணிக்குத் தரையிறங்கினர்.

மருத்துவப் பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்படும் முன் வில்லியம்ஸ் தரையில் புன் னகையுடன் கை அசைக்கும் வீடியோவை நேற்று நாசா வெளி யிட்டது. சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு 4-வது முறையாக பயணம் மேற்கொண்ட ஜெஃப் வில்லியம்ஸ் 172 நாட் களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பியுள்ளார்.

4 பயணத்திலும் இவர் ஒட்டுமொத்தமாக 534 நாட்கள் விண்ணில் கழித்துள் ளார். அமெரிக்க விண்வெளி வர லாற்றில் இது சாதனை அள வாகும். விண்ணில் அதிக நாட்கள் இருந்த அமெரிக்க வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

ஜெஃப் வில்லியம்ஸ் உடன் ரஷ்ய வீரர்கள் அலெக்ஸி ஓவச்சின், ஓலெக் ஸ்கிரிபோச்கா ஆகியோரும் வந்தனர்.

விண்ணில் அதிக நாட்கள் கழித்த அமெரிக்கர் என்ற பெருமையை ஜெஃப் வில்லியம்ஸ் பெற்றாலும், விண்ணில் அதிக காலம் கழித்தவர் (879 நாட்கள்) என்ற பெருமையை ரஷ்ய வீரர் கென்னடி படல்கா வகிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x