

தெற்கு அட்லாண்டிக் கடலில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் அர்ஜென்டி னாவின் தென்கிழக்கில் இருந்து 1500 கடல் மைல் தொலைவில் தெற்கு அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அலகில் 7.3 ஆகப் பதி வானது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட அறிக்கையில் நேற்று அதிகாலை 5.32 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தது.
எனினும் மீண்டும் அதே பகுதி யில் நிலஅதிர்வுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உன்னிப் பாகக் கவனித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்ட் பகுதியில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5.8 ஆகப் பதிவானது. அந்தப் பகுதிகளில் நேற்று 6 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அலகில் 4 ஆகப் பதிவாகின.