Last Updated : 28 May, 2017 04:29 PM

 

Published : 28 May 2017 04:29 PM
Last Updated : 28 May 2017 04:29 PM

பிரிட்டனில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் தகவல்

மான்செஸ்டர் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பிரிட்டனில் 23 ஆயிரம் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என, அந்நாட்டு உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் மான்செஸ்டர் நகரில் கடந்த 22-ம் தேதி அமெரிக்க பிரபல பாப் பாடகி அரினா-வின் இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 119 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை நடத்தியது லிபியாவைப் பிறப்பிடமாகக் கொண்டு, பிரிட்டனில் வாழ்ந்த 22 வயதான சல்மான் அபேதி என்பது விசாரணையில் தெரியவந்தது.

தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றதை அடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவன், அந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதைப் போலீஸார் உறுதி செய்தனர். இதுதொடர்பாக 11 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரிட்டன் ராணுவ உளவுத்துறை (எம்ஐ 5) சல்மான் அபேதி பற்றிய முழுத் தகவல்களை தெரிவிக்குமாறு காவல்துறையைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையே, அந்நாடு முழுவதும் 23,000 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியாகும் ஊடகச் செய்தியால் பிரிட்டன் மக்கள் மேலும் அச்சம் அடைந்துள்ளனர்.

இவர்களில் சந்தேகப்படும்படியான 3 ஆயிரம் பேர் விசாரணை வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளனர். மற்ற 20,000 பேர் முந்தையை விசாரணைகளின் அடிப்படையில் “எஞ்சிய ஆபத்துகள்” என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மான்செஸ்டரில் தாக்குதல் நடத்திய முகமது அபிதியின் சிசிடிவி கேமராவில் பதிவான படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். மேலும், 14 இடங்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x