ஆப்கான் போர் முடிவுக்கு வரும்: ஒபாமா

ஆப்கான் போர் முடிவுக்கு வரும்: ஒபாமா
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நீண்ட காலமாக நடத்திவரும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் போர்த்தியாகிகள் தினத்தையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசினார், .உலகப்போரில் பங்கேற்று போரிட்ட வீரர்களின் தியாகம், சேவையை நினைவு கூர்ந்து அவர் பேசினார். அந் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

2014-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நேட்டோ படைகள் வாபஸ் பெறப்பட உள்ளன.

அதற்கு முன்னதாகவே அமெரிக்க படைகள் வரும் மாதங்களில் நாடு திரும்பத் தொடங்கிவிடும்.இந்த குளிர்கா லத்துக்குள் ஆப்கானி ஸ்தானில் இருக்கும் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை 34 ஆயிரமாக குறையும். அடுத்த ஆண்டின் இதே காலத்தில் ஆப்கானிஸ்தானை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அந்நாட்டிடமே முழுமை யாக ஒப்படைக்கப்பட்டுவிடும். அதோடு அமெரிக்க வரலாற்றில் நெடுங்காலம் நடந்த இந்த போர் முடிவுக்கு வந்துவிடும்.

அந்நாட்டில் இப்போதுதான் உருவாகிவரும் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்கவும் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கான பணியில் அவர்களை தயார்படுத்திடவும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமெரிக்க வீரர்களை சில காலம் அங்கேயே தங்கி இருக்க வகை செய்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ள ஆப்கானிஸ்தான் அரசுடன் அமெரிக்கா பேசி வருகிறது. 2001-ஆம் ஆண்டில் நியூயார்க்கிலும் ராணுவ தலைமையகம்

(பென்டகன்) மீதும் அல் காய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குத லின்போது இன்னுயிர் ஈந்த படை வீரர்களின் தியாகத்தையும் இந்நிகழ்ச்சியில் ஒபாமா நினைவு கூர்ந்தார்.

2-ம் உலகப்போரில் பங்காற்றி பல தலைமுறைகளை தாண்டி 107 வயதை எட்டியுள்ள வீரர் ரிச்சர்ட் ஒவர்டன் உலகப்போரில் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து பாராட்டிப் பேசினார் ஒபாமா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in