

விடுதலைப்புலிகள் அமைப்புக் கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதில் சுமார் 65 ஆயிரம் பேர் காணாமல் போனதாகக் கூறப்படு கிறது. இவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் வலியுறுத்தி வருகின் றனர்.
இதையடுத்து, காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவும் வகையில் ஒரு அலுவலகத்தை அமைப்பது தொடர்பான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த 11-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா ராணுவத்தினரைக் காட்டிக் கொடுக்கும் வகையில் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் அதிபர் ராஜபக்சவும் எதிர்த்தார். எனினும் ஒருசில திருத்தங்களுடன் இந்த மசோதா அன்றைய தினமே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
விதிகளுக்கு புறம்பாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இதில் சபாநாயகர் கையெழுத்திடக் கூடாது என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் புதிய மசோதாவில் சபாநாயகர் கரு ஜெயசூரியா நேற்று கையெழுத்திட்டார். இதன் மூலம் இந்த மசோதா சட்டமானது.