Published : 03 Jan 2017 09:31 AM
Last Updated : 03 Jan 2017 09:31 AM

உலக மசாலா: செய்யாத தவறுக்கு 20 வருட தண்டனை!

ஜப்பானில் வசிக்கும் ஓடோவ்வும் கடயாமா யுமியும் மூன்று குழந்தைகளுடன் மிகவும் சந்தோஷமாக வசித்து வருகிறார்கள். ஆனால் ஓடோவ் கடந்த 20 ஆண்டுகளாக யுமியிடம் பேசுவதில்லை. யுமி பதில் கிடைக்காவிட்டாலும் ஓடோவ்விடம் பேசுவார். இருவருக்கும் கருத்து வேறுபாடோ, சண்டையோ கிடையாது. ‘மூன்று குழந்தைகள் பிறந்தவுடன் குழந்தைகளைக் கவனிப்பதற்கே எனக்கு நேரம் சரியாக இருந்தது. அதனால் அவரிடம் பேசுவது குறைந்து போனது. ஒருகட்டத்தில் அவர் என்னிடம் பேசுவதையே விட்டுவிட்டார். மற்றபடி என் கணவரிடம் எந்தக் குறையும் இல்லை. இது எல்லாப் பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைதான். மற்றவர்கள் அந்தக் காலகட்டத்தைக் கடந்த பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்கள். இவர் அப்படியே இருந்துவிட்டார்’ என்கிறார் யுமி. 18 வயது யோஷிகி, ‘நான் என் அம்மாவும் அப்பாவும் பேசிப் பார்த்ததே இல்லை. என் அக்காக்களுக்குக் கூட இருவரும் பேசிய நினைவு இல்லை. இருவரும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். எங்களை அற்புதமாக வளர்த்திருக்கிறார்கள். ஆனாலும் எங்கள் மீது அளவு கடந்த அன்பும் அக்கறையும் காட்டியதற்காக என் அம்மாவுக்கு இந்தத் தண்டனை என்பது எங்களை மிகவும் சங்கடப்படுத்துகிறது. நாங்கள் எவ்வளவோ முயன்றும் அப்பாவைப் பேச வைக்க முடியவில்லை. தொலைக்காட்சியின் உதவியை நாடினோம். அவர்கள் இருவரிடமும் பேசினார்கள். முதன் முதலில் எங்கள் அம்மாவும் அப்பாவும் சந்தித்துக்கொண்ட ஒரு பூங்காவில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். மூன்று குழந்தைகளைக் கவனிப்பதை நான் முக்கியமாக நினைத்ததால், உங்கள் மனம் வருந்தும்படி நடந்துகொண்டேன் என்றார் அம்மா. இல்லை, நான்தான் குழந்தைகள் மீது அதிக பாசம் காட்டுவதாகப் பொறாமைகொண்டு பேசாமல் இருந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு. இனி ஒருநாளும் பேசாமல் இருக்க மாட்டேன் என்றார் அப்பா. சற்றுத் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. இந்தத் தருணத்துக்காகத்தானே நாங்கள் காத்திருந்தோம்! இனி எங்களுக்கு எந்தவிதக் குற்றவுணர்வும் இருக்காது’ என்கிறார்.

செய்யாத தவறுக்கு 20 வருட தண்டனை!

தாய்லாந்தின் புகெட் தீவில் முதலைகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனுசாக் சலங்கம் என்ற பயிற்சியாளர் 3 மீட்டர் நீளமுள்ள மிக ஆபத்தான முதலையை வைத்து நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார். வாயைத் திறந்துகொண்டிருந்த முதலை திடீரென்று அனுசாக்கின் ஷு அணியாத காலைக் கவ்விப் பிடித்துவிட்டது. நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் தேர்ந்த பயிற்சியாளர் என்பதால், முதலையிடமிருந்து தப்பிவிட்டார் அனுசாக். இந்தச் செய்தி வெளியே பரவினால் எதிர்ப்புக் கிளம்பும் என்பதால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீடியாவிடம், லேசான சிராய்ப்புதான் ஏற்பட்டிருக்கிறது என்றும் இன்று அனுசாக்தான் நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

ஆபத்தான விலங்கோடு இப்படி நிகழ்ச்சி நடத்தலாமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x