Last Updated : 02 Sep, 2016 03:17 PM

 

Published : 02 Sep 2016 03:17 PM
Last Updated : 02 Sep 2016 03:17 PM

கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்தியது சாம்சங்

பேட்டரிகள் வெடிப்பதாக புகார் எழுந்ததையடுத்து கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி 7 அறிமுகப்படுத்தப்பட இரண்டே வாரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சாம்சங் மொபைல் நிறுவனத்தின் கோ டோங் ஜி கூறும்போது, "சாம்சங் கேலக்ஸி 7 புதிய ரக மொபைல் போன்களை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் சார்ஜ் செய்யும்போது போன் வெடித்துவிட்டதாக புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து அத்தகைய புகார்கள் வந்ததால் கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனை நிறுத்தப்படுகிறது.

ஏற்கெனவே இந்த ரக போனை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் அவற்றை எந்த தேதியில் வாங்கியிருந்தாலும் அதற்குப் பதிலாக புதியதொரு ஸ்மார்ட்போனை பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.

சாம்சங் கேலக்ஸி 7 அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 10 லட்சம் போன்கள் விற்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x