Published : 02 Mar 2014 12:00 AM
Last Updated : 02 Mar 2014 12:00 AM

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுத்தோட்டத்தில் புதைகுழி: 9 மனித மண்டை ஓடுகள் சிக்கின

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அமைந்துள்ள தோட்டத்தில் மனித உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதிலிருந்து 9 மனித மண்டையோடுகள் வியாழக்கிழமை சிக்கின.

விடுதலைப் புலிகள் அமைப்பு கோலோச்சியபோது அதன் தலை நகராக இருந்தது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக் குடியிருப்பு பகுதி. அங்குள்ள நிலங்களை உழவுக்காக சமப்படுத்தும் பணிக்காக சீரமைப்பு வேலை யில் ஒரு குடும்பத்தினர் ஈடு பட்டனர். அப்போது கிடைத்த 9 மண்டையோடுகளை விசாரணைக் காக யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் ஒப்படைத்தார் நீதித்துறை மருத்துவ அதிகாரி.

இந்த உடல்கள் விடுதலைப் புலிகள் ரகசியமாக புதைக்கப் பட்டவையாக இருக்கலாம் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பகுதி புலிகளின் கட்டுப் பாட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது. போரில் புதுக்குடியிருப்பு வீழ்ந்தது விடு தலைப்புலிகளுக்கு பலத்த சரிவாக அமைந்தது.

2009ல் நடந்த இறுதி கட்டப்போரில் இலங்கை ராணுவம் முன்னேறியபோது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் இந்த பகுதியில்தான் தங்கி இருந்தனர்.

படைகளை முன்னேறவிடாமல் தடுக்க கடுமையாக போராடிய நிலையில் மீறி உள்ளே வந்தவர் களை அவர்கள் கொன்றனர் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரியா தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்திலும் மத்திய மாவட்டமான மாத்தளையிலும் இரு புதைகுழிகள் இருப்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது போர்க் குற்றங்கள் நிகழ்த்தியதாக இலங்கை ராணுவம் மீது கூறப் படும் புகார்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயேச்சையான சர்வதேச விசா ரணை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்து ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x