

அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்ற ரூ.1.67 கோடி மதிப்பிலான அறிவியல் விருதை வென்று இந்திய மாணவி சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக, ‘ரீஜெனரன் சயின்ஸ் டேலன்ட் சர்ச்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் ஒரு போட்டி நடைபெறுகிறது. அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட இந்தப் போட்டி, அந்நாட்டின் மிகவும் பழமையான, புகழ்பெற்றதாகும்.
இந்த ஆண்டுக்கான போட்டியில் முதல் 10 இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் 5 இந்திய வம்சாவளி மாணவர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் நியூஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த இந்திராணி தாஸ் (17) முதலிடம் பிடித்தார். இதன்மூலம் இவருக்கு சுமார் ரூ.1.67 கோடி மதிப்பிலான விருது கிடைத்தது.
மூளை காயம் அல்லது நரம்பு மண்டல நோய் காரணமாக நரம்பு அணுக்கள் இறப்பதைத் தடுப்பது குறித்து ஆராய்ச்சி செய்ததற்காக இந்தப் பரிசு கிடைத்துள்ளது.
இதுபோல இந்திய வம்சா வளியைச் சேர்ந்த அர்ஜுன் ரமணி (18) மூன்றாம் இடத்தைப் பிடித்து ரூ.1 கோடி பரிசை வென்றுள்ளார். மற்ற இந்திய மாணவர்களான அர்ச்சனா வர்மா (17) ரூ.60 லட்சம், பிரதிக் நாயுடு (18) ரூ.46 லட்சம், விரிந்தா மதன் (17) ரூ.33 லட்சமும் பரிசு வென்றனர்.
1,700-க்கும் மேற்பட்ட மாணவர் கள் இந்தப் போட்டியில் பங்கேற்ற னர். இதில் 40 பேர் தேர்ந்தெடுக் கப்பட்டு தலைநகர் வாஷிங்ட னுக்கு வரவழைக்கப்பட்டனர். இதிலிருந்து முதல் 10 பேர் இறுதி செய்யப்பட்டு அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.