Published : 22 Jan 2014 11:19 AM
Last Updated : 22 Jan 2014 11:19 AM

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கனடா பிரதமருக்கு எதிர்ப்பு

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை நிகழ்த்திய கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை எதிர்த்து அரபு பிரிவு எம்.பி.க்கள் கூச்சல் எழுப்பினர். யூத இன எம்.பி.க்களோ ஸ்டீபனின் உரை நன்கு இருந்ததாக பாராட்டு தெரிவித்தனர்.

யூதர்கள் நாடான இஸ்ரேலுக்கு முதல்முறையாக கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் வருகை புரிந்து சுமார் 20 நிமிடங்கள் திங்கள் கிழமை உரையாற்றினார். அவரது உரை முழுக்கவும் இஸ்ரேல் ஆதரவு கருத்துகளை கொண்டதாக இருந்தது.

இந்நிலையில், ஹார்பர் உரை உரத்த குரலில் இல்லாததால் யார் காதிலும் விழும்படி இல்லை என ஆட்சேபித்து அரபு எம்.பி. யான அகமது திபி வெளிநடப்பு செய்தார். அவருடன் மற்றொரு அரபு எம்.பி.யும் வெளியேறினார். 120 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்திலிருந்து அந்த இருவரும் வெளியேறியதும் எஞ்சிய உறுப்பினர்கள் அனை வரும் எழுந்து நின்று ஹார்பருக்கு பாராட்டு மழை பொழிந்தனர்.

காலனி அமைப்பது தொடர்பான பிரச்சினையில் இஸ்ரேலின் கொள்கைகளை விமர்சித்து சர்வதேச சமூகம் பேசுவது கண்டிக்கத்தக்கது. சர்வதேச அரங்கில் இஸ்ரேலை தனிமைப்படுத்துவதை ஏற்க முடியாது என்றார் ஹார்பர். எல்லாவற்றுக்கும் மேலாக, இஸ்ரேலை இனவெறி நாடு என முத்திரை குத்துகிறார்கள். இது இன்னும் ஆட்சேபகரமானது என்றார் ஹார்பர்.

1967ல் நடந்த 6 நாள் போரின் போது பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களில் புதிய காலனி கட்டப்படும் என இஸ்ரேல் அறிவித்தது பாலஸ்தீனர்கள், ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவின் ஆத்திரத்தை கிளறியுள்ளது. இதற்கிடையில் பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

தனது வெளியுறவு கொள்கை விஷயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையில் உள் ளது கனடா. அரபு வம் சாவளி இஸ்ரேலியர்கள் அனைவரும் பாலஸ்தீனர்கள் ஆவர். 1948ல் இஸ்ரேல் நிர்மாணிக்கப்பட்டதிலிருந்தே வசித்துவருகிறாகள். அரபு இஸ்ரேலியர் வழியில் பிறந்தவர்கள் இஸ்ரேல் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் உள்ளனர். 120 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் அரபு எம்.பி.க்களின் எண்ணிக்கை 12 ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x