

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழக வகுப்பறையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மாணவர் உயிரிழந்தார். தாக்குல் நடத்தியவரை போலீஸார் கைது செய் துள்ளனர்.
மத்திய மேற்கு மாநிலமான இந்தியானாவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தின் மின்சார பொறியியல் கட்டிடத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் உயிரிழந்த மாணவனை, துப்பாக்கியால் சுட்டவருக்கு தெரிந்தவராக இருக்கக் கூடும் என்பதால் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என போலீஸார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பல்கலைக்கழக காவல் நிலைய உயர் அதிகாரி ஜான் காக்ஸ் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். எனினும், சம்பவத்தில் உயிரிழந்தவரின் பெயரையோ தாக்குதல் நடத்தியவரின் பெயரையோ காவல் துறையினர் தெரிவிக்கவில்லை.
இந்தத் தாக்குதலில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மாநில ஆளுநர் மைக் பென்ஸ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.