

மனித உரிமைகளை பேணவும், பாதுகாக்கவும் இலங்கை முயற்சிகள் எடுக்க வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு குறித்து செய்தியாளர் ஒருவர், சீன வெளியுறவுத் துறை செய்தி டொடர்பாளர் கின் காங்கிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், "ஒரு நாட்டின் சமூக, பொருளாதார பின்னணியைப் பொருத்து, அந்நாட்டின் மனித உரிமைகளைப் பேணுவதில் நாடுகளுக்கு இடையே வித்தியாசம் ஏற்படலாம். ஆனால், தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு மனித உரிமைகளை பாதுகாக்க அந்தந்த நாடுகள் முயற்சிப்பது அவசியம்" என்றார்.
மேலும், இலங்கைக்கு, மற்ற நாடுகள் ஆக்கபபூர்வமான உதவிகளைச் செய்ய வேண்டும். இலங்கை,மனித உரிமைகளை பேணவும், பாதுகாக்கவும் இலங்கை முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார்.
சீனாவைப் பொருத்த வரை இதுவரை இலங்கைக்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வந்தது. முதல் முறையாக சீனா, மனித உரிமைகள் விவகாரம் குறித்து இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது கூட, இலங்கை உள்நாட்டு விவகாரத்தை அந்நாட்டு மக்களே சரி செய்து கொள்வார்கள் என்று கூறியிருந்தது.