

பிரேசிலில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் இடதுசாரிகள் சார்பில் தில்மா ரூசெப் (68) போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையுடன் தில்மா அதிபர் பதவியேற்றார். அதன்பின் 2015-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று அவர் அதிபரானார். ஆனால், வரவு செலவு கணக் கில் (பட்ஜெட்) பல தவறான தகவல்களை அளித்ததாக அவர் மீது புகார் எழுந்தது.
பட்ஜெட்டில் பல தகவல் களைப் போலியாக தந்து, நாட்டின் பொருளாதாரம் பலமாக உள்ள தாக கூறினார் என்று அவர் மீது குற்றம் சாட்டினர். மேலும், தில்மா ஆட்சியில் வேலைவாய்ப் பின்மை அதி கரித்து விட்டது, பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லை என்ற சரமாரியாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றத் தில் தில்மாவுக்கு எதிராக நம்பிக் கையில்லா தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. செனட் உறுப்பினர்கள் 81 பேரில் 61 உறுப் பினர்கள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். அதன் மூலம் அதிபர் பதவியில் இருந்து தில்மா ரூசெப் உடனடியாக நீக்கப்பட்டார் . இதன்மூலம் பிரேசிலில் கடந்த 13 ஆண்டு காலமாக நிலவிய இடதுசாரிகள் ஆட்சிக்கு முற் றுப் புள்ளி வைக்கப்பட்டது. இதைய டுத்து தற்காலிக அதிப ராக மைக் கேல் டெமெர் பதவியேற்றார்.
இதற்கிடையில், தில்மா ரூசெப் 8 ஆண்டுகளுக்கு எந்தப் அரசு பதவியும் வகிக்க கூடாது என்று கோரி மேலும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானத்துக்கு உறுப்பினர்களின் போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்தது. இதன்மூலம் தில்மா மீண்டும் அரசியலில் தீவிரமாக ஈடுபடும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பதவியை இழந்த தில்மா கூறும்போது, ‘‘எந்த தவறும் செய்யாத நிலையில், எனது ஆட்சியை கவிழ்த்திருக்கின்றனர். நான் மீண்டும் பலமுடன் வருவேன்’’ என்று தெரிவித்தார்.