

உஸ்பெஸ்கிதான் அதிபர் இஸலாம் கரிமொவ் (isalam karimov) (78) உடல் நிலை மோசமான நிலையில் உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதிபர் கரிமொவின் மகள் லோலா கடந்த வாரம் "தனது தந்தையின் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் அரசு தனது குடிமக்களுக்கு அளித்த தகவலில் "அன்புள்ள குடிமக்களுக்கு நம் பிரதமர் உடல் நிலை கடந்த 24 மணி நேரமாக ஆபத்தான கட்டத்தில் உள்ளது. அவரது உயிர் எந்த நிலையிலும் பிரியலாம் என்பதை கனத்த மனதுடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உஸ்பெகிஸ்தான் அதிபர் மரணம் அடைந்து விட்டதாகவும், இந்த செய்தியை வெள்ளிகிழமை உஸ்பெகிஸ்தான் அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என செய்தி வெளியிட்டுள்ளது.