Last Updated : 28 Sep, 2015 07:14 AM

 

Published : 28 Sep 2015 07:14 AM
Last Updated : 28 Sep 2015 07:14 AM

125 கோடி மக்களை டிஜிட்டல் முறையில் இணைக்க விரும்புகிறேன்: சிலிகான்வேலியில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து

“இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களையும் டிஜிட்டல் முறையில் இணைக்க விரும்புகிறேன். அதற் காக குறைந்த கட்டணத்தில் பிராட்பேண்ட் இணைப்பு வழங்கு வது உட்பட பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறோம்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப் பய ணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று அதிபர் பாரக் ஒபாமாவை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக சிலிகான்வேலியில் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மத்தியில் மோடி பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:

ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் ஒரு முனையில் இந்தியாவும், மறுமுனையில் அமெரிக்காவும் உள்ளன. இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டிய பொறுப்பு உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியா, அமெரிக்காவுக்கு உள்ளது. குறிப் பாக ஆசிய பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை, நல்லி ணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்புள்ளது.

இந்தியர்களும் அமெரிக் கர்களும் இணைந்து அறிவார்ந்த பொருளாதார மேம்பாட்டுக்கு பணியாற்றுகின்றனர். தொழில் நுட்பத்தின் திறனை புரிந்துகொள்ள அவர்கள் விழிப்புணர்வை ஏற் படுத்தி உள்ளனர். மிகப்பெரிய நிறுவனங்கள் முதல் இளம் தொழில் நுட்ப நிபுணர்கள் வரை, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு அங்கமாக உள்ளனர். இந்திய - அமெரிக்க உறவு என்பது இளைஞர்களின் சக்தி, தொழில்நுட்பம், கண்டு பிடிப்புகளால் நிர்ணயிக்கப் படுகிறது. இவைதான் இரு நாடு களின் நட்புறவுக்கு ஊக்க சக்திகளாக உள்ளன.

உலகில் ஈடு இணையில்லாத வகையில் இந்தியாவை மாற்று வதே டிஜிட்டல் இந்தியா திட்டத் தின் முயற்சி. அதற்கான ஆற்றல், திறமை உள்ளது. காகிதம் இல் லாத பரிவர்த்தனையை (பேப்பர் லெஸ் டிரான்ஸாக் ஷன்) உரு வாக்குவதே இந்திய அரசின் லட்சியம். இதை நிறைவேற்ற, ‘டிஜிட்டல் லாக்கர்’ முறையை ஒவ்வொரு இந்தியருக்கும் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் எல்லா துறைகளுக்கு இடையிலும் ஆவணங்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

‘MyGov.in’ இணையதளத்தை தொடர்ந்து, இப்போது ‘நரேந்திர மோடி அப்’ அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த தொழில் நுட்பங்கள் மக்களுடன் நான் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள பெரிதும் உதவுகின்றன. இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக பிராட் பேண்ட் வசதியை குறைந்த கட்டணத்தில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தொழில்நுட்பம்தான் நம்பிக் கைக்கும் வாய்ப்புக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது. இப் போதைய டிஜிட்டல் உலகில் மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்க நமக்கு வாய்ப்பு கிடைத் துள்ளது.

இந்த வசதி 20 ஆண்டுகளுக்கு முன்பு கிடையாது. எனவே, தொழில் நுட்பங்கள் எளிதில் அணுகக் கூடியதாக, குறைந்த விலையில் கிடைக்கக் கூடியதாக, மதிப் புள்ளதாக இருக்க வேண்டும். அதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில் சைபர் பாதுகாப்பு, அறிவுசார் சொத்துக் களுக்கு பாதுகாப்பை உறுதி செய் வதற்கு இந்திய அரசு அதிகபட்ச முன்னுரிமை அளிக்கிறது. இவ் வாறு மோடி கூறினார்.

சிலிகான்வேலிக்கு 30 ஆண்டு களுக்கு பிறகு வந்துள்ள முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x