

சோமாலியா தலைநகர் மொகதிசுவில் உள்ள ஒரு விடுதியில் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 28 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி கர்னல் முகமது அப்தி கூறும்போது, “மொகதிசுவில் உள்ள தயா விடுதிக்கு அரசு அதிகாரிகள் அடிக்கடி செல்வது உண்டு. இந்நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இந்த விடுதிக்குள் திடீரென புகுந்து அங்கிருந்தவர்களைத் துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாதுகாப்புப் படையினர் விடுதியை முற்றுகை
யிட்டு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது தாக்குதல் நடத்திய 4 பேரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் 28 பொதுமக்கள் பலியாயினர். இந்தத் தாக்குதலுக்கு அல்-ஷபாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது” என்றார். - பிடிஐ