அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல் இந்தியர் கைது

அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல் இந்தியர் கைது
Updated on
1 min read

அமெரிக்காவில் யூதர் மீது இனவெறித் தாக்குதல் நடத்திய இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, சந்தேகப்ப டும்படியான நபர்கள் யாரேனும் இருந்தாலோ அல்லது இனவெறி நோக்கத்தாலோ அந்த நபர்கள் மீது குத்து விட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்து கின்றனர். இதற்கு ‘நாக் அவுட் அட்டாக்ஸ்’ என்று பெயர்.சமீபகாலமாக இவ்வகையான நாக் அவுட் தாக்குதல்கள் அதி கரித்திருக்கின்றன. இதனிடையே, அம்ரித் மாராஜ் (28) என்ற இந்திய வம்சாவளி இளைஞர், 24 வயது யூத இளைஞரை இனவெறி நோக்கத்தோடு தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அவருடன் மேலும் மூவர் சேர்ந்து தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான யூதர், குல்லா அணிந்தி ருந்தார்.

மேற்காசிய இனத்துக்கு எதிரான கோஷத்துடன் மாராஜ் தாக்குதலில் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ரூ. 47 ஆயிரம் ரொக்க ஜாமீனில் மாராஜ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுபோன்ற 6 நாக்அவுட் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவை குறித்து விசாரிக்கப்படுவதாகவும் நியூ ஹாவென் பகுதி போலீஸார் தெரிவித்துள்ளனர். -பி.டி.ஐ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in