

ஆஸ்கர் விருது அமைப்பானது முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளது. எதிர்காலத் தில் உலகம் முழுவதிலும் தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பவும் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டில் பரிந்துரைக்கப்பட்ட இசையமைப்பாளர்களை கௌரவிக்கும் வகையில் 86வது ஆஸ்கர் அகாதெமி விருது நிகழ்ச்சிக்கு முன் பிப்ரவரி 27-ம் தேதி உக்லாஸ் ராய்ஸ் ஹாலில் பரிந்துரைக்கப்பட்ட இசை அமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் தமது நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 75 அல்லது 100 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என மோஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸஸ் நிர்வாகி தெரிவித்தார்.