‘இரும்புக் கை’யை வீழ்த்திய ஜோகோவி..

‘இரும்புக் கை’யை வீழ்த்திய ஜோகோவி..
Updated on
2 min read

ஜோகோவி’ என்று மக்களால் அழைக்கப்படும் இந்தோனேசியாவின் ஏழாவது அதிபர் ஜோகோ விடோடோ (53) பற்றி இங்குள்ள ஊடகங்கள் குறிப்பிடும்போது, ‘இந்தோனேசியாவின் நரேந்திர மோடி’ என்று வர்ணிக்கின்றன. காரணம், இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் பல கலாச்சார ஒற்றுமைகள் இருப்பதுபோல், இந்தியப் பிரதமர் மோடிக்கும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விக்கும் உள்ள சில அடிப்படை ஒற்றுமைகள்தான்.

இருவருமே அரசியல் பின்னணி இல்லாத எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். மோடிக்கு டீக்கடை என்றால், ஜோகோவிக்கு மரச் சாமான் கடை. இருவருமே முதலில் ஒரு மாநிலத் துக்குள் அரசியல் செய்து தங்கள் ஆளுமையை நிரூபித்துவிட்டு அதன்பிறகு தேசிய அரசியலில் அதிரடியாக அடியெடுத்து வைத்த வர்கள். அவ்வாறு அடியெடுத்து வைத்த முதல் தேர்தலிலேயே வெற்றியும் பெற்றனர். அதுவும் பல ஆண்டுகளாக நாட்டில் ஆழமாக வேரூன்றிய அரசியல் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி பதவியில் அமர்ந்துள்ளனர் மோடியும் ஜோகோவியும்.

ஜோகோவியின் அசுர வளர்ச்சி

எளிய குடும்ப பின்னணியைக் கொண்ட ஜோகோவி இந்தோனேசி யாவின் மத்திய ஜாவா மாகாணத் தின் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந் தார். வனவியலில் கல்லூரிப் பட்டப் படிப்பை முடித்தவுடன், மரச்சாமான் விற்கும் தொழில் நடத்திவந்தார். தொழில்முனைவராக ஏற்றம் கண்ட ஜோகோவி; நண்பர்களின் உதவியுடனும், இந்தோனேசிய ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையு டனும் 2005-ஆம் ஆண்டு, தாய் நகரமான சோலோவில் மேயர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தொடர்ந்து நகரச் சீரமைப்புப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஜோகோவி, மக்களின் பேராதரவுடன், இரண்டாம் முறையாக ‘சோலோ’ நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேயராகத் தனது பதவிக்காலம் முடியும் முன்பாகவே இந்தோனே சியத் தலைநகர் ஜகார்த்தாவின் கவர்னர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிகண்டார்.

எதிர்நோக்கும் சவால்கள்

ஜகார்த்தா மக்களின் நற் பெயரால் பிரபலமடைந்த ஜோகோ வியை அதிபராகப் போட்டியிட இந்தோனேசிய ஜனநாயகக் கட்சி பரிந்துரைத்தது. தேர்தல் சமயத்தில், எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தியே அவர் தனது பிரச்சாரங்களை மேற்கொண்டார். அந்த மக்களின் பேராதரவோடு அதிபர் தேர்தலில் பெரு வெற்றியை ருசித்திருக்கிறார்.

பெரும்பாலும் ராணுவக் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இந்தோனேசியாவின் அரசியல் கட்டமைப்பை ஜோகோவி எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதை உலக நாடுகளே கூர்ந்து கவனித்து வருகின்றன. திங்கள்கிழமை நடந்த பதவியேற்பு விழாவில், “நாட்டு மக்களின் நலம் கருதி, கட்சி வேறுபாடுகளின்றி, ஒற்றுமையுடன் நாம் பணியாற்றவேண்டும்!” என்று ஜோகோவி கூறி இருப்பது, மறைமுகமாக ராணுவ தலையீடு களுக்கு விடப் பட்டுள்ள எச்சரிக்கை யாகவே பார்க்கப்படுகிறது.

வீழ்த்தப்பட்ட இரும்புக் கை!

இந்தோனேஷியா, சுமார் முப்பது ஆண்டுகள் சுகார்த்தோ என்ற ராணுவ அதிகாரியின் இரும்புப் பிடியில்தான் ஆளப்பட் டது. சுகார்த்தோவின் சர்வாதிகார ஆட்சியில் அரசியல் கட்டுக்கோப் புடன், பொருளாதார வளர்ச்சியும் அடைந்தது.

அதே சமயம் கட்சிக்குள் பரவிய ஊழல் காரணமாக சுகார்த் தோவின் சர்வாதிகார ஆட்சி 1998ல் முடிவுக்கு வந்தது. அதன் பிறகான தேர்தல்கள் அனைத்தும் ஜனநாயக முறையில் தான் நடந்தன. ஆனாலும், ஜனநாயக ஆட்சி முறைக்கான இந்த மாற்றம் ஒரு கண்துடைப்பாகவே பார்க்கப்பட் டது. காரணம், அரசாங்கம் தொடர்ந்து சுகார்த்தோ வின் நெருங் கிய ராணுவத் தலைவர் களின் கட்டுப் பாட்டில்தான் இயங்கி வந்தது.

நடந்து முடிந்த அதிபர் தேர்த லில், ஜோகோவியை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபோவோ சுபியாந் தோவும்கூட மறைந்த சுகார்த்தோ வின் முன்னாள் மருமகன்தான். அதனால்தான் ஜோகோவியின் இந்த வெற்றி உண்மையான ஜனநாயக வெற்றியாக நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in